கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
தடியூன்றும் வயதில் உல்லாச ஆசை.! 5 அழகிகளுடன்., ரெய்டில் சிக்கிய முதியவர்..! 2 பேர் கைது.!
சுற்றுலா நகராக இருந்து வரும் புதுச்சேரியில் மசாஜ் சென்டர், அழகு நிலையம் என்கிற பெயரில் விபச்சார தொழில் நடைபெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில், சிறுமியை பாலியல் தொழிலை தள்ளியதாக 40 பேரின் மீது போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள குயவர்பாளையம் லெனின் வீதியில் செயல்பட்டு வரும் அழகு நிலையத்தில், விபச்சார தொழில் நடைபெற்று வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உருளையன்பேட்டை காவல் துறையினர், அழகு நிலையத்திற்குள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அழகு நிலையத்தில் விபச்சாரம் நடைபெறுவது உறுதியானது. இதனைத்தொடர்ந்து, அழகு நிலைய உரிமையாளர் ஜெசிமா (வயது 35), உல்லாசத்திற்கு வந்த மயிலாடுதுறை முதியவர் ராஜகோபால் (வயது 63) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், 5 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.