ட்விட்டரில் மனைவியுடன் போட்டோ வைத்துள்ளவரா நீங்கள்?.. மர்ம நபர் செய்த லீலை.. உஷார்.!



Pondicherry Doctor Wife photo Miss used 

 

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கொலாஸ் நகர் பகுதியில் வசித்து வருபவர் மருத்துவர் வெங்கட்ராமன்யா (வயது 36). இவர் ஜிப்மரில் முதுகலை மருத்துவம் பயின்று வருகிறார். 

இவரின் ட்விட்டர் கணக்கில் சமீபத்தில் அறிமுகமான நபரிடம் மருத்துவர் பேசி வந்த நிலையில், அவர் மருத்துவரின் முகவரி உட்பட தனிப்பட்ட தகவலை கேட்டுள்ளார். 

Pondicherry

இதனை அவர் வழங்க மறுக்கவே, ஆத்திரமடைந்த நபர் மருத்துவரின் மனைவி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி மிரட்டி இருக்கிறார். இதனால் அதிர்ந்துபோன மருத்துவர், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் மர்ம நபருக்கு வலைவீசியுள்ளனர்.