பிச்சைக்காரரிடம் ரூ.1.14 இலட்சம்: கைப்பையில் பண்டல் பண்டலாக கிடந்த பணக்கட்டுகள்.!Police investigate about old man

 

குஜராத் மாநிலத்தில் உள்ள வல்சாத் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 50 வயதுடைய நபர் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் காந்தியின் நினைவு மண்டபம் அருகே சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

அங்கு அவர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் உயிரிழப்பை உறுதி செய்தனர். மேலும் அவரின் கைப்பையில் ரூ.1.14 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன.

குஜராத்

ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 ஆகிய தாள்கள் அடங்கிய ரூபாய்கள் தனித்தனியே பையில் முடிந்து வைக்கப்பட்டு இருந்துள்ளன. உயிரிழந்தவரின் அடையாளத்தை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.