இந்தியா

பெண்கள் விடுதிக்குள் புகுந்து மிரட்டி ஆடையின்றி நடனம் ஆட வைத்த போலீசார்.! வெளியான அதிர்ச்சி வீடியோ.!

Summary:

பெண்கள் விடுதிக்குள் புகுந்த போலீசார் அவர்களை மிரட்டி ஆடையின்றி நடனமாட வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் விடுதிக்குள் புகுந்த போலீசார் அவர்களை மிரட்டி ஆடையின்றி நடனமாட வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தில் உள்ள கனேஷ் நகர் பகுதியில் மாநில அரசின் சார்பில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தங்கி வருகின்றனர். அவர்களுக்கு இந்த விடுதியில் தங்கும் வசதியும், இலவச உணவும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், இந்த விடுதியில் போலீசார் மற்றும் விடுதி ஊழியர்கள் சிலர் அங்கு தங்கியிருக்கும் பெண்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறி அவர்களில் சிலரை மிரட்டி ஆடைகளை களைய செய்து நடனமாடச் செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சில ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. இது தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. 2 நாட்களில் இக்குழு விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்கும் என தெரிவித்துள்ளார்.


Advertisement