இந்தியா

ஊரடங்கை மீறி சுற்றிதிரிந்த வெளிநாட்டினர்! போலீசார் கொடுத்த நூதன தண்டனை!

Summary:

Police gave punisment to foreiners who stroll lockdown

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 9000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 331பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனோ பரவுவதை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் கடந்த மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் தற்போதும் கொரோனா கட்டுக்குள் அடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில் ஊரடங்கை நீட்டிக்க அனைத்து மாநில முதல்வர்களிடையே மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது எனவும் மீறினால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மேலும் ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களுக்கு நூதன தண்டனைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உத்தரகாண்ட் ரிஷிகேஷ் பகுதியில் போலிசார் தீவிர பணியில் ஈடுபட்டிருந்தபோது வெளிநாட்டைச் சேர்ந்த 10 பேர் ஊரடங்கை மீறி சமூக விலகலை  பின்பற்றாமல் வெளியே சுற்றி வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களை பிடித்த போலீசார்  விசாரணை மேற்கொண்டு அவர்களை, நான் ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் என 500 முறை எழுதுமாறு நூதன தண்டனை கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போலிசார்கள் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.


Advertisement