முக கவசம் அணியாத பெண்ணை மகள் முன்னே சரமாரியாக தாக்கிய போலீசார்.! அதிர்ச்சி வீடியோ.!

முக கவசம் அணியாத பெண்ணை மகள் முன்னே சரமாரியாக தாக்கிய போலீசார்.! அதிர்ச்சி வீடியோ.!



police beat women for not wear mask

மத்திய பிரதேச மாநிலத்தில் முகக் கவசம் அணியாத பெண்ணை போலீசார் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமெடுத்து நாளுக்கு நாள் பல உயிர்களை பறித்து வருகிறது. இதனால் இந்தியாவில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் சாகர் மாவட்டத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 

அப்போது பெண் ஒருவர் தனது மகளுடன் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது அப்பெண் முகக் கவசம் அணிய தடை கவனித்த போலீசார் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து அப்பெண்ணை போலீஸ் வாகனத்தில் ஏறுமாறு கூறியுள்ளனர். ஆனால் அந்தப் பெண் வாகனத்தில் ஏறுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அப்பெண்ணின் தலை முடியை பிடித்து தரதரவென இழுத்து, சரமாரியாக தாக்கியுள்ளனர். 

தனது தாயை போலீசாரிடம் இருந்து காப்பாற்றுவதற்காக அவரது மகள் நீண்ட நேரம் போலீசாரிடம் போராடியுள்ளார். அங்கு நடந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோ காட்சியாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், போலீசாருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.