இந்தியா

இளம்பெண்ணை கீழே தள்ளி மேலே ஏறி உட்கார்ந்த காவல்துறை அதிகாரி.! வெளியான ஷாக் வீடியோ.!

Summary:

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் இருக்கும் துர்கதாஸ்பூர் கிராமத்தில் சிலர் சூதாட்டம் ஆடுவத

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் இருக்கும் துர்கதாஸ்பூர் கிராமத்தில் சிலர் சூதாட்டம் ஆடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து உதவி ஆய்வாளர் மகேந்திர படேல் விரைந்து சென்று அந்த கும்பலை பிடிக்க முயற்சித்துள்ளார். போலீசாரை பார்த்ததும் அனைவரும் தப்பிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் ஷிவம் யாதவ் என்ற வாலிபர் மட்டும் சிக்கியுள்ளார்.

அவரை போலீஸ்நிலையம் அழைத்து செல்ல உறவினர்கள் தடுத்துள்ளனர். கைது செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் லஞ்சம் வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரம் கொண்டு கைது நடவடிக்கையில் தீவிரம் காட்டி இருக்கிறார் மகேந்திர படேல். அவரை காவல்நிலையம் அழைத்து செல்ல உறவினர்கள் தடுத்துள்ளனர். 

வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்துள்ளது. அப்போது ஆவேசமாக பேசிய ஷிவம் யாதவ் மனைவி ஆர்த்தியை மகேந்திர படேல் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சலசலப்பின் போது படேல், யாதவின் மனைவி ஆர்த்தி மீது அமர்ந்து இருப்பதும், அவரது சட்டை காலரை ஆர்த்தி பிடித்து இருப்பதுமான வீடியோ காட்சி இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ வைரலாக நிலையில், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இதுதொடர்பாக கான்பூர் தேஹாட் காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில், படேலை விசாரித்து வருவதாகவும், தற்காலிகமாக அவரை கான்பூர் காவல் பணியில் இருந்து நிறுத்தி டிரான்ஸ்வர் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement