இந்தியா வீடியோ

அடித்து, உதைத்து மருத்துவமனையில் அத்துமீறிய போலீசார்கள்! பதறியடித்து ஓடிய நோயாளிகள்! வைரலாகும் ஷாக் வீடியோ!

Summary:

police attack hospital in mangaluru

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், பெரும் போராட்டம் வெடித்தது.

மேலும் டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது போலீசார்கள் மாணவர்கள் மீது தடியடி நடத்தியதால் போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும் சாலைகளில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது.

இவ்வாறு குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் நாளுக்கு நாள் போராட்டங்கள் பெருமளவில் தீவிரமடைந்து வருகிறது.இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மங்களூரில் போராட்டம் நடைபெற்ற நிலையில் போலீசார்கள் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி விரட்டியுள்ளனர்.

இதில் பலர் அப்பகுதியில் அமைந்துள்ள ஹைலேண்ட் மருத்துவமனைக்குள் நுழைந்துள்ளனர். ஆனாலும் அவர்களை விடாது துரத்தி சென்ற போலீசார்கள் மருத்துவமனை வளாகத்தில் கண்ணீர் புகை குண்டு வீசியதோடு நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் அறைகளின் கதவு மற்றும் ஐசியூ கதவுகளை உதைத்து அடித்துள்ளனர். 

இதனால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பதறி அடித்து ஓடியுள்ளனர். மேலும் அதுமட்டுமின்றி போலீசார்கள் போராட்டக்காரர்கள் மட்டுமின்றி மருத்துவமனை ஊழியர்கள் உட்பட அனைவரையும் லத்தியால் அடித்து தாக்கியதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இத்தகைய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement