"மக்களே அச்சப்படாதீர்கள்; உங்களுக்கு தேவையானது நிச்சயம் கிடைக்கும்" - பிரதமர் மோடி

"மக்களே அச்சப்படாதீர்கள்; உங்களுக்கு தேவையானது நிச்சயம் கிடைக்கும்" - பிரதமர் மோடி



pm-modi-tweeted-not-to-panic

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஏப்ரல் 15 வரை 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும் இதனால் மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில் "மக்கள் இதுகுறித்து துளியளவும் அச்சப்பட தேவையில்லை. அத்தியாவசிய பொருட்கள், மருந்து மற்றும் இதர பொருடகள் நிச்சயம் கிடைக்கும். மத்திய மற்றும் மாநில அரசுகள் இதற்காக தீவிரமாக வேலைசெய்யும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை அழித்து வளமான இந்தியாவை உருவாக்குவோம்" என குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் உணவு தொடர்பான பொருட்களை விற்பனை செய்யும் மளிகை கடைகள், காய்கறி, பழங்கள், பால், இறைச்சி, மீன், பெட்ரோல் மற்றும் எரிவாயு, தொலைத்தொடர்பு, இணையசேவை, மின்சாரம், குடிநீர், மருந்தகங்கள், வங்கிகள், ஏடிஎம், மாவட்ட நிர்வாக அலுவலகங்கள், அஞ்சலகம் மற்றும் இன்னும் சில அத்தியாவசிய தேவைகளை வழக்கம் போல் இயக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உள்ளன.

மேலும் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை ஒவ்வொருவரின் வீட்டிற்கே கொண்டு சேர்க்க மாவட்ட நிர்வாகங்கள் தங்களுக்கு ஏற்றவாறு வசதியை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்றும் இணைய வழி வர்த்தகத்தின் மூலம் உணவு பொருட்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.