இந்தியா

பிரதமர் மோடிக்கு என்ன ஆச்சு? சமூக வலைத்தளங்களில் இருந்து திடீரென விலக திட்டம்!

Summary:

Pm modi thinking of leaving social medias

இந்திய பிரதமர் மோடி தொடர்ந்து இரண்டாவது முறை பிரதமர் பதவியேற்று மத்தியில் ஆட்சி செய்து வருகிறார். இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் மிகவும் பிரபலமானவராக பிரதமர் மோடி இருந்து வருகிறார்.

உலக அளவில் இவர் பிரபலமானதற்கு முக்கிய காரணம் சமூக வலைதளங்களான ட்விட்டர், போஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவை தான். இத்தகைய சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடி அடிக்கடி தகவல்களை பறிமாறுவது வழக்கம்.

சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடி வெளியிட்ட சேலஞ்ச் வீடியோக்கள் உலகளவில் மிகவும் பிரபலமடைந்தன. இந்நிலையில் பிரதமர் திடீரென ஒரு அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதாவது வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் இருந்து விலகுவது குறித்து சிந்தித்து வருவதாகவும், இதுகுறித்து மேலும் தகவல்களை வெளியிடுவதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.


Advertisement