பிரான்சில் பிரதமர் மோடிக்காக பாட்டு பாடிய இந்தியப் பெண்..!! உற்சாக வரவேற்பு.!!

பிரான்சில் பிரதமர் மோடிக்காக பாட்டு பாடிய இந்தியப் பெண்..!! உற்சாக வரவேற்பு.!!



pm-modi-receives-a-warm-welcome-by-the-members-of-india

ரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார் பிரதமர் மோடி . இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்:-

"பாரிசில் தரையிறங்கி விட்டேன். இந்த பயணம் இந்தியா-பிரான்ஸ் இடையேயான நட்புறவை மேம்படுத்தும் என்று எதிர்பார்த்துள்ளோம். இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளேன் அதில், மாலையில் இந்திய சமூகத்துடனான உரையாடலும் அடங்கும்" என்று பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள அவர் தங்குவதற்கான ஹோட்டலுக்கு வந்தடைந்த பிரதமர் மோடிக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியை பாரிஸில் சந்தித்த பிறகு, புலம்பெயர்ந்த இந்தியப் பெண் ஒருவர் அவருக்கு ஒரு பாடலை பாடி அர்ப்பணித்துள்ளார்.