அரசியல் இந்தியா

பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்.!

Summary:

பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் 36 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

2020-ம் ஆண்டு பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விவரங்களை, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. சமீபத்திய சொத்து அறிவிப்புகளின் படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பிரதமர் நரேந்திர மோடியின் நிகர சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 36 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. 

2020 ஜூன் 30 நிலவரத்தின் படி பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 2.85 கோடி ரூபாய். இதுவே சென்ற ஆண்டு 2.49 கோடி ரூபாய். பிரதமர் மோடி செய்துள்ள பாதுகாப்பான முதலீடுகளின் வழியாக 33 லட்சம் ரூபாயும், வங்கி டெபாசிட்கள் மூலமாக 3.3 லட்சம் ரூபாயும் லாபம் அடைந்துள்ளதாகவும், அதுவே அவரது சொத்து மதிப்பு உயர காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி எந்தவொரு கடனும் வாங்கவில்லை மற்றும் அவரது பெயரில் தனிப்பட்ட வாகனம் இல்லை. சுமார் 45 கிராம் எடையுள்ள நான்கு தங்க மோதிரங்களை அவர் வைத்திருக்கிறார், இதன் மதிப்பு ரூ. 1.5 லட்சம் ஆகும்.


Advertisement