இந்தியா Covid-19

Breaking#: ஊரடங்கு நீட்டிக்கப்படுமா! இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

Summary:

Pm modi adresses nation today 8 pm

நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கானது வரும் மே 17 ஆம் தேதியுடன் முடிவடையும் தருவாயில் இன்று மாலை 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உறையாடவுள்ளார் பிரதமர் மோடி.

நேற்று ஏற்கனவே அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரஸிங் மூலம் பிரதமர் மோடி பேசினார். இதில் மாநில முதல்வர்கள் அவரவர் மாநில நிலவரங்களை குறிப்பிட்டனர்.

இதனைத் தொடர்ந்து இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார். இதில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த தகவலை பிரதமர் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால் இந்த முறை ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஊரடங்கினை அறிவிக்காமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மட்டும் ஊரடங்கினை அமலில் வைக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் பிரதமர் மோடி என்ன பேசுகிறார் என்பதை பொறுத்தே அடுத்த நகர்வுகள் இருக்கும்.


Advertisement