விமானத்திற்குள் புகுந்த புறாக்கள்! இடைஞ்சலுக்கு வருத்தம் தெரிவித்த விமான நிறுவனம்Pigeons flying inside flight

அகமதாபாத்தில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற விமானத்தில் இரண்டு புறாகக்ள் புகுந்ததால் திடர் பரபரப்பு ஏற்பட்டது.

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஜெய்ப்பூர் வரை செல்லக்கூடிய GoAir விமானம் இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாராக இருந்துள்ளது. விமானத்தில் பயணிகள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்துள்ளனர்.

GoAir

அப்போது தீடீரென விமானத்திற்குள் இரண்டு புறாக்கள் பறந்ததை கண்டு பயணிகள் கூச்சலிட்டுள்ளனர். பின்னர் விமான ஊழியர்கள் சத்தம் எழுப்பி புறாக்களை வெளியில் விரட்டியுள்ளனர்.

அதன் பின்னர் விமானம் புறப்பட்டுள்ளது. விமானத்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த திடீர் சம்பவத்திற்கு GoAir விமான நிறுவனத்தின் சார்பில் மன்னிப்பு கேட்டுள்ளனர். மேலும் விமான நிலையத்தில் பறவைகள் புகுவதை தடுக்கவும் வகை செய்ய வேண்டும் என கோரியுள்ளனர்.