இந்தியா

சவப்பெட்டியில் இருந்த கணவனின் முகத்தை பார்த்தபடி அமர்ந்திருந்த மனைவி..! ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்..!

Summary:

Photos Of Handwara Bravehearts Mourning Wife Draw Emotional Response

வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஹந்த்வாரா சங்கிமுல்லா என்ற பகுதியில் கடந்த சனிக்கிழமை நடந்த பயங்கர வாத தாக்குதலில் கர்னல், மேஜர், 2 ராணுவ வீரர்கள், போலீசார் உட்பட 5 பேர் உயிர் இழந்தனர். நாட்டிற்காக வீர மரணம் அடைந்த அவர்களின் உடல்கள்  அவர்களது சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இதில் மேஜர் அனுஜ் சூட் அவர்களின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. அனுஜ் சூட்டின் இறுதி சடங்கின்போது அவரது மனைவி அக்ரிதி சூட் செய்த சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தனது கணவரின் உடலின் அருகில் அமர்ந்துகொண்ட அக்ரிதி சூட் நீண்ட நேரமாக கண்ணசைக்காமல் சோகம் கலந்தகண்களுடனும் , நொறுங்கிப்போன இதயத்தோடும் தன் கணவரையே பார்த்துக்கொண்டிருந்தார்.

இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புகைப்படத்தை பார்க்கும் அனைவரும் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் தங்களது வருத்தத்தையும், இறங்கல்களையும் கூறிவருகின்றனர் .


Advertisement