மீண்டும் ஊரடங்கு அச்சம்.! காய்கறி வாங்க அலைமோதிய மக்கள்..!

மீண்டும் ஊரடங்கு அச்சம்.! காய்கறி வாங்க அலைமோதிய மக்கள்..!


People purchase vegetables for corona fear

கொரோனா தொற்றுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இடம் பெற்றுள்ள இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் பாதிப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தநிலையில், தற்போது நாளொன்றுக்கு பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமானதால், கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது.

இந்தநிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி அரசு நிர்வாகம் மக்களை வலியுறுத்தி வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் வார விடுமுறை நாட்களில் முழு அடைப்பு அமல்படுத்த அரசு முடிவு செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது.  

இதனையடுத்து, நாக்பூர் மாவட்டத்தில் நேற்று முதல் வருகிற 21 ஆம் தேதி வரை ஒரு வார கால ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் அத்யாவசிய தேவைகளான பால் பூத், காய்கறி, பழம் மற்றும் மருந்து கடைகள் போன்றவை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பல நாட்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி இருப்பில் வைத்து கொள்கின்றனர். இதனால் மும்பை தாதர் மார்க்கெட் பகுதியில் இன்று காலையிலேயே மக்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.