பால் வாங்க வெளியே சென்ற 10 வயது சிறுமி! திடீரென மாயம்...குப்பை கிடங்கில் போர்வையில் சுற்றப்பட்டு இருந்த சிறுமி பிணம்! ஆட்டு முடியால் சிக்கிய கொலையாளி... நடுங்க வைக்கும் பின்னணி!!!
பீஹாரின் பாட்னாவில் 10 வயது சிறுமி கொலை வழக்கில், ஒரு சிறிய ஆதாரம் போலீஸாரை நேரடியாக குற்றவாளி வரை கொண்டு சென்றுள்ளது. போர்வையில் ஒட்டியிருந்த ஆட்டு முடி தான் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக அமைந்தது. சம்பவத்துக்குப் பிறகு சில நாட்களிலேயே குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
மாயமான சிறுமி... சடலமாக மீட்பு
தகவலின்படி, பாட்னா அருகே வசித்த 10 வயது சிறுமி, ஏப்ரல் 23ஆம் தேதி பால் வாங்க வீட்டிலிருந்து வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேட ஆரம்பித்தனர். அதன்பின், ஒரு குறுகிய சந்தில் உள்ள குப்பைக் கிடங்கின் அருகே, போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆட்டு முடி காட்டிய வழி
விசாரணையில் போலீஸார் போர்வையை ஆய்வு செய்தபோது, அதில் ஆட்டு முடிகள் ஒட்டியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பகுதியில் ஆடு வளர்ப்பவர்களை மையமாக வைத்து police investigation தீவிரப்படுத்தப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் அருகிலுள்ள வீடுகள் சோதனை செய்யப்பட்டன.
பூட்டை உடைத்து கைது
ஒரு வீட்டின் முன்பு பல ஆடுகள் கட்டப்பட்டிருந்ததும், வீடு வெளியில் பூட்டப்பட்டிருந்ததும் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்படுத்தியது. பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது, ரஞ்சித் என்ற நபர் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஜன்னல் வழியாக போலீஸின் நடமாட்டத்தை கவனித்துக் கொண்டிருந்ததும் உறுதி செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட ரஞ்சித், விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தவறான நோக்கில் சிறுமியை அழைத்துச் சென்று, எதிர்ப்பு தெரிவித்ததால் அம்மிக்கல்லால் தாக்கி கொன்றதாக தெரிவித்தார். பின்னர் சடலத்தை மறைத்து வைத்து, நள்ளிரவில் அகற்ற முயன்றபோது போலீஸ் ரோந்து பார்த்ததும் பயந்து குப்பைக் கிடங்கில் வீசியதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, சிறுமி கொலை வழக்கில் ரஞ்சித்துக்கு எதிராக கடுமையான சட்டப்பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குற்றவாளி எவ்வளவு திட்டமிட்டாலும், ஒரு சிறிய ஆதாரம் கூட உண்மையை வெளிக்கொணரும் என்பதற்கு இந்த வழக்கு எடுத்துக்காட்டாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.