எங்களால் இதை செய்ய முடியாது... பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற பெற்றோர்... ஏன், என்ன காரணம் தெரியுமா.?

எங்களால் இதை செய்ய முடியாது... பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற பெற்றோர்... ஏன், என்ன காரணம் தெரியுமா.?


Parents killed their son in Telangana

தெலுங்கானா மாநிலத்தில் கம்பத் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் சிங் - ராணி பாய் தம்பதியினர். இவர்களுக்கு சாய்ராம்(26) என்ற மகன் உள்ளார். ராம் சிங் அரசு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சாய்ராம் படிப்பை முடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் மதுவுக்கு அடிமையாகி ஊரை சுற்றி வந்திருக்கிறார்.  

அதுமட்டுமின்றி மது குடிக்க பணம் கேட்டு பெற்றோரை அடித்து துன்புறுத்தியும் வந்திருக்கிறார் . இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சாய்ராமின் பெற்றோர்,  இப்படி ஒரு மகன் தங்களுக்கு தேவையே இல்லை என்று முடிவுக்கு வந்திருக்கின்றனர். ஆனால் பெற்ற மகனை தங்கள் கையால் கொலை செய்ய மனசு வரவில்லை.

Telangana

எனவே 8 லட்சம் ரூபாயை கூலிப்படைக்கு கொடுத்து சாய்ராமை கொலை செய்ய கூறியுள்ளனர். அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி சாய்ராம் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கடைசியில் பெற்ற மகனை கொலை செய்ய பெற்றோரே கூலிப்படையை ஏவியது தெரியவந்துள்ளது. அதனையடுத்து போலீசார் கூலிப்படையினர் மற்றும் ராம் சிங், ராணி பாய் தம்பதியினரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.