அடக்கொடுமையே! குழந்தைகள் கதறகதற மண்ணிற்குள் புதைத்த பெற்றோர்கள்! இதுதான் காரணமா? வைரலாகும் ஷாக் வீடியோ!

அடக்கொடுமையே! குழந்தைகள் கதறகதற மண்ணிற்குள் புதைத்த பெற்றோர்கள்! இதுதான் காரணமா? வைரலாகும் ஷாக் வீடியோ!



parents buried child for solar eclipse

சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்பொழுது அதன் நிழல் சூரியனை மறைக்கும். இதனையே சூரிய கிரகணம் என்கிறோம்.இந்த சூரிய கிரகணம் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும். இந்த முழு சூரிய கிரகணம் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி காலை 11.14 மணி வரை நீடித்தது. 

மேலும் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசய கிரகணம் என்பதால் இதனை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கண்டு ரசித்தனர். மேலும் பல பகுதிகளில் சூரிய கிரகணம் நேரும் இந்த நேரத்தில் யாரும் சாப்பிடக்கூடாது, வெளியில் செல்லக்கூடாது போன்ற  அறிவியல் பூர்வகமாக நிரூபிக்க படாத பல்வேறு தகவல்களும் பரவி வந்தது. இந்நிலையில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம் தாஜ்சுல்தான்பூரை சேர்ந்த கல்புர்கி என்ற பகுதியில் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களை உடல் முழுவதும் கழுத்து வரை மண்ணிற்குள் புதைத்துள்ளனர்.

solar esclipse

மேலும் இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் நோய்களைத் தவிர்க்கலாம் மற்றும் அவர்களுக்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நம்புவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.