விசாரணைக்கு ஒத்துழைப்பு தர தயார்! பாக்.பிரதமர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

விசாரணைக்கு ஒத்துழைப்பு தர தயார்! பாக்.பிரதமர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு


Pak pm asks for talk

இந்தியா-பாகிஸ்தான் இடையே இன்று ராணுவ சண்டை நிகழ்ந்து வருகிறது. பாக்., இந்திய ராணுவத்தை வீழ்த்தியதாகவும், இந்தியா பாக்., ராணுவத்தை வீழ்த்தியதாகவும் தகவல்களை வெளியிட்டு கொண்டிருக்கின்றன. 

இந்நிலையில் இந்திய விமானப்படை பைலட் அபிநந்தன் பாக்., ராணுவத்தினரிடம் சிக்கியதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தன் வர்த்தமான் இன்று காலை ஜம்மு விமானப் படைத் தளத்தில் இருந்து மிக் 21 விமானத்தில் பாதுகாப்பு பணிக்கு சென்றார். காலை சென்ற அவர் 11 மணிக்கு காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. ரேடாரில் அவர் சென்ற விமானம் மர்மமாக பாகிஸ்தான் அருகே மறைந்தது.

இவர் எங்கே இருக்கிறார் என்று உறுதிப்படுத்த கூடிய வகையில் எந்த விவரமும் வெளியாகவில்லை. இவரை குறித்து நிறைய தகவல்களும், புகைப்படங்களும், வீடியோக்களும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து வெளியாகிக் கொண்டு இருந்தன. ஆனால், மத்திய அரசு இந்த விவகாரத்தில் ஆழ்ந்த அமைதி காத்தது.

அதன்பின் இந்திய தரப்பில் இருந்தும் சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியானது. இன்று காலை மிக் 21 விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்னும் திரும்பவில்லை என்று தகவல் வெளியானது. விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் இன்னும் திரும்பவில்லை என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில் புல்வாமா தாக்குதல் குறித்த விசாரணைக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளாதாக கூறி பேச்சுவார்த்தைக்கு இந்தியா வருமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.