இந்தியா லைப் ஸ்டைல்

என்னடா இது சோதனை? இந்த ஆண்டில் இதுவரை எத்தனை நானோ கார்கள் விற்பனையாகியுள்ளதாம் தெரியுமா?

Summary:

Only one nano car sold in this year

கடந்த 2008ம் ஆண்டு டாடா நிறுவனம் தனது மலிவு விலை காரான டாட்டா நானோவை அறிமுகம் செய்தது. இந்த காரின் விலை 1 லட்சம் மட்டுமே என டாட்டா நிறுவனம் கூறியதால், ஒரு லட்சத்தில் காரா? கார் எப்போது விற்பனைக்கு வரும் என வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர்.

காரும் விற்பனைக்கு வந்தது. ஆனால், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நானோ கார் பூர்த்தி செய்யவில்லை. இதனால் இந்த கார் மீது இருந்த மோகம் மக்கள் மத்தியில் குறைய தொடங்கியது. இதனால் ஆண்டுக்கு ஆண்டு நானோ காரின் விற்பனை சரிந்துகொண்டே சென்றது.

இந்நிலையில் இந்த ஆண்டு இதுவரை ஒரே ஒரு நானோ கார் மட்டுமே விற்பனை ஆகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சரியான அளவு விற்பனை இல்லாவிட்டாலும், நானோ கார் மீது கொண்ட உணர்வுப்பூர்வ காரணங்களால் அதன் உற்பத்தியை நிறுத்தவில்லை என டாட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.


Advertisement