இந்தியா

தொண்டை வலியால் அவதிப்பட்ட இளம்பெண்.! வாயை திறந்து பார்த்த மருத்துவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..!

Summary:

One of the young women continuely affted by Throat pain

ஜப்பானில் 25 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் தொடர் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனை அடுத்து அந்த இளம்பெண் மருத்துவரை அணுகியுள்ளார். அங்கு மருத்துவர்கள் அந்த பெண்ணின் வாயைதிறக்குமாறு கூறியுள்ளனர்.அப்போது அந்த பெண்ணின் தொண்டையில் டான்சில்ஸ் பகுதிக்கு கீழ் புழு ஒன்று உயிருடன் இருந்ததை பார்த்த மருத்துவர் அதிர்ச்சி அடைந்தார்.

அதாவது அந்த இளம்பெண் ஷாஷிமி என்று அழைக்கப்படும் பச்சை மீனை அப்படியே சாப்பிட்டுள்ளார். அதாவது இது போன்ற பச்சையாகவோ அல்லது சமைக்காத கடல்வாழ் மீன்களையோ உட்கொள்ளும் போது உள் இருக்கும் லார்வாக்கள் மூலம் மக்களுக்கு பாதிப்பை  ஏற்படுத்தக்கூடும். அதே போல் தான் அந்த பெண்ணுக்கும் ஏற்ப்பட்டுள்ளது.

தொடர் தொண்டை வலியால் மருத்துவமனைக்கு சென்ற அந்த இளம்பெண்ணின் தொண்டையிலிருந்து 1.5 இன்ச் நீளமும் 1 மி.மீட்டர் அகலமும் உடைய புழுவை உயிருடன் மருத்துவர்கள் எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement