தனது குழந்தைக்கு ஒட்டகப்பால் வேண்டும் என ட்வீட் செய்த பெண்! சரக்கு இரயிலில் 20லி பாலை அனுப்பிய ஐஏஎஸ் அதிகாரி..!

தனது குழந்தைக்கு ஒட்டகப்பால் வேண்டும் என ட்வீட் செய்த பெண்! சரக்கு இரயிலில் 20லி பாலை அனுப்பிய ஐஏஎஸ் அதிகாரி..!



one-mumbai-lady-asked-camel-milk-in-twitter

மும்பையை சேர்ந்த ரேனு குமாரி என்ற பெண் தனது குழந்தைக்கு ஒட்டகப்பால் வேண்டும் என பிரதமர் மோடியை டேக் செய்து ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த ட்வீட்டரில் எனது மூன்றரை வயது மகனுக்கு உடல்நிலை சரியில்லை. 

அதுமட்டுமின்றி அவனுக்கு மாட்டுப்பால் மற்றும் ஆட்டுப்பால் குடித்தால் உடல் ஒவ்வாமை ஏற்ப்படுகிறது. எனவே ஒட்டகப்பால் வேண்டும். மேலும் ஊரடங்கு காரணமாக ஒட்டகப்பால் கிடைக்கவில்லை. எனவே பால் அல்லது பால் பவுடரை அனுப்பி வைக்குமாறு ட்வீட் செய்துள்ளார்.

Camel milk

அந்த ட்வீட்டர் பலருக்கும் பரவியுள்ளது. இந்நிலையில் அந்த ட்விட்டை ஐஏஎஸ் அதிகாரி அருண் போத்ராவும் பார்த்துள்ளார். உடனே ராஜஸ்தானில் உள்ள ஒட்டகப்பால் தொடர்பான நிறுவனத்திடம் பேசி 20லி பாலை சரக்கு ரயில் மூலம் மும்பையில் உள்ள அந்த பெண்ணிடம் சேர்த்துள்ளனர்.