இந்தியா

ஒரு எருமை மாட்டிற்கு இப்படி ஒரு கிராக்கியா.. 24 கோடிக்கு கேட்டும் தர மறுத்த உரிமையாளர்.!

Summary:

ஒரு எருமை மாட்டிற்கு இப்படி ஒரு கிராக்கியா.. 24 கோடிக்கு கேட்டும் தர மறுத்த உரிமையாளர்.!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அர்விந்த் ஜாங்கிட். இவர் பீம் என்ற உயர்ரக எருமை மாட்டை வளர்த்து வந்துள்ளார்.1500 கிலோ எடை கொண்ட அந்த எருமை மாட்டை பராமரிப்பற்கு மட்டும் மாதம் 2 லட்சம் செலவு செய்கிறார் அர்விந்த் ஜாங்கிட்.

பீம்மின் விந்து 0.25மிலி 500 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், வருடத்திற்கு 2500மிலி விந்துவை விற்று 50 லட்சம் வரை சம்பாதிக்கிறார் அர்விந்த் ஜாங்கிட். பீம்மின் விந்து மூலம் பிறக்கும் எருமைகள் 40 முதல் 50 கிலோ வரை எடை இருக்கும்.

பின் அந்த எருமைகள் வளர்ந்து நாளொன்றுக்கு 20 முதல் 30 லிட்டர் வரை பால் கொடுக்கும் திறன் கொண்டவையாக உள்ளது. அதனால் தான் பீம் எருமை மாட்டிற்கு நிறைய கிராக்கி உள்ளதாம். மேலும் ரூ.24 கோடி விலைக்கு கேட்டும், அதைக் விற்க அர்விந்த் மறுத்துவிட்டார். 

 


Advertisement