அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
ஜிலேபியும் சமோசாவும் ஆபத்தான உணவா! லேபிளில் எச்சரிக்கை வாசகமா! மத்திய சுகாதாரத் துறை புதிய நடவடிக்கை....
இந்தியாவில் உடல் பருமன் மற்றும் அதிக எடை கொண்டவர்களின் எண்ணிக்கை வருடா வருடம் வேகமாக உயர்ந்து வருகிறது. 2050 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 44.9 கோடிக்கும் மேற்பட்டோர் இப்பிரச்சனையில் சிக்கக்கூடும் என மத்திய சுகாதார துறை வெளியிட்டுள்ள ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது நகர்ப்புறங்களில் வசிக்கும் ஒவ்வொரு 5 பேரில் ஒருவருக்கு இந்த பிரச்சனை காணப்படுவது கவலைக்குரியது. மேலும், குழந்தைகளிடம்கூட அதிக எடை பிரச்சனை பரவிவருவதால், அரசு நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், நாக்பூர் எயிம்ஸ் உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும், அன்றாட உணவுகளில் உள்ள எண்ணெய் மற்றும் சர்க்கரை அளவுகள் குறித்த விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு அவர்கள் உண்பது எப்படி உடல்நலனில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தெளிவாக எடுத்துச் சொல்லும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க: புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.! விரக்தியில் கல்லூரியிலேயே மாணவி எடுத்த விபரீத முடிவு!! அதிர்ச்சி சம்பவம்!!
இதற்கிடையில், சமோசா மற்றும் ஜிலேபி போன்ற மக்கள் அதிகம் விரும்பும் சிற்றுண்டிகள் குறித்து பேக்கெட் லேபிளில் எச்சரிக்கை வாசகம் வைக்கப்படும் என ஒரு செய்தி வெளியாகியது. ஆனால், இது தவறான தகவல் என மத்திய சுகாதாரத் துறை மறுத்துவிட்டது. உண்மையில், இந்த வகை உணவுகளின் எண்ணெய் மற்றும் சர்க்கரை அளவுகள் பற்றிய தகவல்களையே பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் திட்டமே நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதுப்பெண்ணிடம் முதலிரவு அன்று கர்ப்ப பரிசோதனை செய்ய சொன்ன மாப்பிள்ளை! 2 மணி நேரமாக.. என்ன காரணம்னு பாருங்க! கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!