இந்தியா

திருமணமான 3 மாதத்தில் இளைஞருக்கு ஏற்பட்ட துயரம்.! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

கேரளாவில் திருமணமான 90 நாளில் வாலிபரை ஆணவ கொலை செய்த மனைவியின் தந்தை மற்றும் தாய்மாமனை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் பாலக்காடு இளமந்தனம் பகுதியை சேர்ந்த தம்பதி ஆறுமுகம்- ராதா. இவர்களது மகன் அனிஸ். 27 வயது நிரம்பிய இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். அனிஸ் அதே பகுதியை சேர்ந்த ஹரிதா என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இவர்களது காதலுக்கு ஹரிதா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இவர்களது காதல் விவகாரம் தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே பலமுறை பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு அனிஸ்-ஹரிதா ஆகிய இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு இருவரும் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

இதையடுத்து இருவரின் பெற்றோரையும் காவல் நிலையத்திற்கு அழைத்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களது திருமணத்திற்கு ஹரிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இருவரின் விருப்பப்படி அனிஸ் குடும்பத்தினருடன் ஹரிதா அனுப்பி வைக்கப்பட்டார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் அனிஸ், அவரது சகோதரர் அருண் ஆகிய இருவரையும் ஹரிதாவின் தந்தை பிரபுகுமார், தாய்மாமன் சுரேஷ் ஆகிய 2 பேரும் தடுத்து நிறுத்தி தகராறு செய்து அருணை அடித்து விரட்டிவிட்டு அனிசை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தனர். இதுதோடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement