கேரள முதல்வரின் அதிரடி அறிவிப்பு.. நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு உற்சாக செய்தி.!

கேரள முதல்வரின் அதிரடி அறிவிப்பு.. நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு உற்சாக செய்தி.!


new-houses-to-be-built-for-those-who-lost-their-homes

கேரளாவில் ஏற்ப்பட்ட பயங்கர நிலச்சரிவில் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு புதிய இடத்தில், புதிய வீடு கட்டி தரப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் உள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில், கடந்த 7ஆம் தேதியன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் 20 வீடுகள் மண்ணுக்குள் புதைந்து சேதமடைந்தன.

KERALA

அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த 80 பேர் மண்ணில் புதைந்தனர். அதில் 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்ட அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது மூணாறு நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு நிலம் வழங்கி புதிய வீடுகள் கட்டித் தரப்படும் எனவும் நிலச்சரிவில் இறந்த, உயிரோடு மீட்கப்பட்டோரின் குழந்தைகளது கல்விச் செலை அரசே ஏற்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.