இந்தியா லைப் ஸ்டைல்

புது மாப்பிளையை கழுதை மேல் ஏற்றி ஊரை சுற்றிவந்த கிராம மக்கள்..! விசாரணையில் வெளியான பகீர் காரணம்..!

Summary:

New groom ride with donkey

புது மாப்பிளையை ஊர் மக்கள் கழுதை மேல் ஏற்றி ஊர்வலமாக வரும் சம்பவம் மஹாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 90 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது.

மஹாராஷ்டிராவில் உள்ள பீட் என்ற மாவட்டத்தில் அமைந்துள்ள விதா என்னும் கிராமத்தில் தான் இந்த வினோத பழக்கம் பின்பற்றப்படுகிறது. 90 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த்ராவ் தேஷ்முக் என்பவர் ஏற்படுத்திச்சென்ற இந்த பழக்கத்தை அந்த கிராம மக்கள் இன்றுவரை பின்பற்றிவருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும், தங்கள் குடும்பத்திற்கு மருமகனாக வந்திருக்கும் புது மாப்பிளையை கழுதை மேல் ஏற்றி, அவரை ஊர்வலமாக அழைத்துச்சென்று, கிராமத்தின் எல்லையில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் மாப்பிள்ளைக்கு புத்தாடை பரிசாக வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற கோலி பண்டிகையை முன்னிட்டு தத்தாத்ரே கெய்க்வாட் என்னும் புது மாப்பிளையை அந்த கிராம மக்கள் கழுதை மேல் ஏற்றி ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.


Advertisement