இந்தியா

19 வயது இளைஞருக்கு இப்படியொரு விசித்திர நோயா? நாளுக்கு நாள் மகனை கண்டு துடிதுடிக்கும் தாயார்!!

Summary:

Mystery condition causes Indian teenager's stomach to grow

முசாபர்பூர் நகரில் வசித்து வருபவர் சுஜித் குமார்.19 வயது நிறைந்த இவர் வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது. இந்த இளைஞனின் வயிறு நாளுக்கு நாள் பானை போன்ற பெரிதாகி வருகிறது. மேலும் இதனால் அவர் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளார் அது மட்டுமின்றி கடுமையான வலியாலும் அவதிப்பட்டு வருகிறார்.

மேலும் தற்போது மெக்கானிக்காக பணியாற்றி வரும் சுஜித்க்கு அவரது ஏழு வயது முதலே இந்த நோய் உள்ளது. அவர் பல மருத்துவர்களை ஆலோசனை செய்தும் இந்த நோய்க்கு என்ன காரணம் என கண்டுபிடிக்க  இயலவில்லை.

 மேலும் இதுகுறித்து சுஜித் குமாரின் தாயார் கூறுகையில் இந்த வினோத நோயால் தனது மகன் பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறார். ஆனால் இதுவரை அதற்கான எந்த தீர்வும் கிடைக்கவில்லை. மேலும் ஒவ்வொரு முறை மருத்துவமனை செல்லும் போதும் வலியை குறைப்பதற்கான மருந்துகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நோய் முழுவதும் குணமாக தேவையான சிகிச்சை எதுவும் வழங்கப்படவில்லை.

 மேலும் தற்போது எங்கள் கிராமத்திலிருந்து 622 மைல்கள் தொலைவில் இருக்கும் டெல்லி நகருக்கு சிகிச்சைக்குச் செல்ல வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஆனால் எங்களது வறுமையின் காரணமாக அங்கு செல்லும் நிலையில் நாங்கள் இல்லை என வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.

 


Advertisement