இப்படியெலம்மா பெண் தேடுவது..? இணையத்தை அதிரவைத்த திருமண விளம்பரம்.! இப்படி ஒரு பெண் இருந்தால் சொல்லுங்க..!

இப்படியெலம்மா பெண் தேடுவது..? இணையத்தை அதிரவைத்த திருமண விளம்பரம்.! இப்படி ஒரு பெண் இருந்தால் சொல்லுங்க..!


Mysteries abhinav kumar marriage advertisement goes viral

மிகவும் அழகான, நேர்மையான, நம்பத்தகுந்த, அன்பான, அரவணைப்பான, வீரமிக்க, சக்திமிக்க, பணக்கார பெண்ணாகவும், இந்தியாவின் மிலிட்டரி பலத்தை வலுப்படுத்தும் தனக்கு ஒரு மனைவி வேண்டும் என நபர் ஒருவர் கொடுத்துள்ள விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

அபினவ் குமார் (31) என்பவர் தனது வருங்கால மனைவி எப்படி இருக்கவேண்டும், அவருக்கான தகுதிகள் என்ன என்பது குறித்து விளம்பரம் ஒன்றை செய்தித்தாளில் கொடுத்துள்ளார். தான் ஒரு பல் மருத்துவர் என்றும், தற்போது தான் எந்த வேலையும் செய்யவில்லை என தன்னை அறிமுகப்படுத்தும் அபினவ் குமார் தனது வருங்களாக மனைவிக்காக தகுதிகள் குறித்து கூறியிருப்பது அனைவரும் தலைசுற்ற வைக்கிறது.

அவருக்கு வர இருக்கும் மனைவியானவர், மிகவும் அழகான, மிகவும் நேர்மையான குணம் கொண்டவராகவும், நம்பத்தகுந்த, அன்பான, அரவணைப்பான, பணக்கார பெண்ணாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர், அந்த பெண் குழந்தை வளர்ப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல், மணப்பெண்ணுக்கு அதீதமான தேசப்பற்று இருக்க வேண்டும் என்றும், இந்தியாவின் மிலிட்டரி மற்றும் விளையாட்டு துறைகளை வலுப்படுத்தும் சிந்தனை கொண்டவராக இருக்க வேண்டும் என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்புட்டுள்ளார் அபினவ் குமார்.

தற்போது இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகிவருகிறது.