பணியிடத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை காவலர்.. வாட்ஸப்பில் ஆபாச பேச்சு..!Mumbai Thar Police Station Lady Cop Sexual Harassed by Head Constable FIR Registered

தலைமை காவலர் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக எழுந்த புகாரில், தலைமை காவலரின் மீது வழக்குப்பதிந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, கார் காவல் நிலையத்தில் பெண் காவல் அதிகாரி பணியாற்றி வருகிறார். இதே காவல் நிலையத்தில் நடுத்தர வயதுடைய தமைமை காவலர் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், ஒரே பணியிடத்தில் பணியாற்றி வரும் பெண் காவல் அதிகாரியிடம் நட்பாக பேசுவதுபோல நடித்து வந்த தலைமை காவலர், பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளார். 

மேலும், வாட்சப் சேட்டிங்கில் பெண் காவலரிடம் ஆபாசமாக மற்றும் இரட்டை அர்த்தத்துடன் உரையாடுவது, அவரை பின்தொடர்ந்து செல்வது என நூதன வகையில் தொல்லை அளித்துள்ளார்.

Mumbai

இதனை பெண் காவலர் கண்டித்து இருந்த நிலையில், தலைமை காவலர் அதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஒரு அளவுக்கு மேல் பொறுமையை இழந்த பெண்மணி, அதே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விசாரணைக்கு பின்னர் குற்றம் உறுதியானதால் தலைமை காவலர் கைது செய்யப்படுவார் எனவும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.