ஒயின் குடிச்சிட்டு வண்டில வந்தா பிடிப்பீங்களா ஆபீசர்? - காவல்துறை ட்விட்டரில் கலகலப்பு.!Mumbai Police Explain about If you Drunk and Driver Wine Liquor

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை காவல் துறையினரின் ட்விட்டர் பக்கம், நெட்டிசன்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் எழுப்பும் சமூக பிரச்சனைகளை கலந்தாலோசித்து, அதற்கான ஆலோசனைகளையும் மும்பை காவல்துறையினரின் ட்விட்டர் பக்கம் வழங்கி வருகிறது. 

இந்த புத்திசாலித்தனமான மற்றும் நகைச்சுவை செயல்பாடுகள் நெட்டிசன்களிடம் நல்ல வரவேற்பை அளித்துள்ளது. இந்த நிலயில், ட்விட்டரில் சிவம் வஷியா என்பவர் காவல் துறையினரின் பக்கத்தை மேற்கோள்கண்பித்து, சிவசேனா கட்சியின் தலைவரான சஞ்சய் ராவத்தின் கருத்தான "ஒயின் மதுபானம் இல்லை" என்பதை குறிப்பிட்டு கேள்வி எழுப்புகிறார்.

Mumbai Police

மேலும், மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் சஞ்சய் ராவத்தை கைது செய்வீர்களா? அல்லது மதுபான கடையை கண்காணிப்பீர்களா? என்று கேட்கவே, இதனைக்கண்ட சஞ்சய் ராவத், "நான் மதுபானம் அருந்தி வாகனம் இயக்கினால் மும்பை காவல்துறை என்னை கைது செய்யுமா? கம்பிகளுக்கு பின்னால் நிறுத்துமா? அல்லது அருகேயுள்ள மதுக்கடையை காண்பிக்குமா?" என்று பதில் அளித்து இருந்தார்.

இந்த விஷயத்திற்கு சூசகமாக பதிலளித்துள்ள மும்பை காவல்துறை, சஞ்சய் ராவத் மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டியபோது பிடிக்கப்பட்டால் சீரியல் அடைக்கப்படுவார். அவ்வாறு மதுபானம் அருந்த விரும்பினால், பொறுப்பான குடிமகனாக ஓட்டுநர் உள்ள காரில் நீங்கள் பயணம் செய்யலாம். நீங்கள் குடித்துள்ள மதுவில் ஆல்கஹால் உறுதி செய்யப்பட்டால், கம்பிகளுக்கு பின்னால் விருந்தினராக இருக்கவேண்டும்" என்று தெரிவித்துள்ளது.