அம்மாடியோவ்.. இவ்வளவா! முகேஷ் அம்பானி வாங்கிய கார்! விலையை கேட்டா தலைச்சுற்றி போயிருவீங்க!!

அம்மாடியோவ்.. இவ்வளவா! முகேஷ் அம்பானி வாங்கிய கார்! விலையை கேட்டா தலைச்சுற்றி போயிருவீங்க!!


Mugesh ambani bought rolls royce car for 13 crores

உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் முகேஷ் அம்பானி. இவர் கார்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஏராளமான புது ரக கார்களை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் முகேஷ் அம்பானி தற்போது ரோல்ஸ் ராய்ஸ் காட்ஜ்பேக் காரை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு கல்லினன் பெட்ரோல் ரக காரை அறிமுகம் செய்தது. அப்போது இந்த காரின் தொடக்கவிலை ரூ.7 கோடியாம். ஆனால் காரை வாங்குபவர்களின் தேவைக்கேற்ப செய்யப்படும் மாற்றங்களால் அதன் விலை அதிகரிக்கும். இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபரான முகேஷ் அம்பானி அந்தக் காரை  ரூ.13 கோடியே 14 லட்சத்திற்கு வாங்கியுள்ளாராம்.

mugesh ambani

இது இந்தியாவிலேயே வாங்கப்பட்ட முதல் விலையுயர்ந்த கார் என கூறப்படுகிறது. இந்த கார்  12 சிலிண்டர்களை கொண்டதாம். 2.5 டன் எடை, 564 பி.எச்.பி. திறன் கொண்டது எனவும் கூறப்படுகிறது. மேலும் அவர் காருக்கு ரூ.12 லட்சம் கொடுத்து ‘0001' என்ற வி.ஐ.பி. எண்ணை வாங்கியதாகவும், அதற்காக ரூ.20 லட்சம் வரி, ரூ.40 ஆயிரம் சாலை வரியும் செலுத்தியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.