மகனை அடித்து நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து, முன்னாள் கணவருக்கு அனுப்பிய மனைவி!!

மகனை அடித்து நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து, முன்னாள் கணவருக்கு அனுப்பிய மனைவி!!



mother tortured her son

மகாராஷ்டிரா மாநிலத்தில், பையாஸ் சேக் என்ற தம்பதியினர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். 

இந்தநிலையில், தன் மகனை பராமரிப்பதற்காக விவாகரத்து பெற்ற கணவர் மாதந்தோறும் ஹீனாவிற்கு ஒரு தொகையை அனுப்பிவந்துள்ளார். ஆனால் அந்த தொகை போதவில்லை என்பதற்காக ஹீனா, தனது மகனை கொடூரமாக தாக்கி அதனை வீடியோ எடுத்து கணவருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை பார்த்த பையாஸ் சேக் அதிர்ச்சியடைந்து, காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

பையாஸ் சேக் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஹீனாவை கைது செய்தனர். அவர் மீது சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.