இந்தியா உலகம்

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மகள்.. மத்திய அரசுக்கு தாய் கண்ணீர் கோரிக்கை..!

Summary:

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மகள்.. மத்திய அரசுக்கு தாய் கண்ணீர் கோரிக்கை..!

சிவகாசியை சேர்ந்த பெண்மணி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது மகளை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு உதவி செய்யவேண்டும் என வீடியோ வெளியிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரின் மனைவி சாந்தலட்சுமி. இந்த தம்பதிகளுக்கு திவ்யா சொர்ணமால்யா என்ற மகள் இருக்கிறார். இவர் மருத்துவ படிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்து வந்ததால், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு சென்று படித்துள்ளார்.

இந்த நிலையில் தனது குடும்பத்துடன் தொடர்பு கொண்டிருந்த மாணவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவரை தாய்நாட்டிற்கு திரும்பி அனுப்புமாறு தாயார் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் மாணவி எழுந்து நடமாட முடியாத நிலையில் இருப்பதால், கிடைத்த தகவலை வைத்து மகளை மீட்டுக் கொண்டுவர மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.


Advertisement