தனது இரு குழந்தைகளையும் துடிதுடிக்க தூக்கில் தொங்கவிட்டு, தாய் செய்த காரியம்.! வெளியான பதறவைக்கும் சம்பவம்!!



mother-killed-sons-and-commit-suicide

மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வருபவர் ராஜு. இவரது மனைவி சீதா. இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் 5 வயதில் ருத்ரா மற்றும் 4 வயதில் ஸல்  என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் ராஜு மற்றும் சீதாவிற்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை ஏற்பட்டுள்ளது.மேலும் பெற்றோர்களின் பேச்சை கேட்டு ராஜு சீதாவை கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்த சித்ரவதையை தாங்க முடியாத சீதா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். 

suicide

அப்பொழுது அங்கு வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனது இரு மகன்களையும் தூக்கில் தொங்க விட்டுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் கதறி துடித்தனர். மேலும் சீதா தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

அதில் எனது மரணத்திற்கு காரணம் எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரே என்று எழுதியுள்ளார். இதனைத்தொடர்ந்து இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜீவின் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.