திருமண டென்ஷனில் இப்படியா செய்வது? மாமியார் செய்த காரியத்தால் அதிர்ச்சியில் மருமகள்! விழுந்து விழுந்து சிரித்த உறவினர்கள்! வைரலாகும் வீடியோ!mother in law getting blessing from daughter in law

திருமண நிகழ்வு என்றாலே டென்ஷன், பரபரப்பு இருப்பது வழக்கம. மேலும் இதனால் பல சுவாரசியமான விஷயங்களும் நடைபெறும் இந்நிலையில் திருமண டென்ஷனில் மாமியார் ஒருவர் மருமகளின் காலை தொட்டு ஆசிர்வாதம் பெற்ற சம்பவம் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே திருமண நிகழ்வுகளில் திருமணம் முடிந்த பிறகு மணமக்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் மற்றும் உறவினர்களிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது வழக்கம். இந்நிலையில் அவர்களும் மணமக்கள் நீண்டகாலம் நன்றாக வாழ வேண்டும் என ஆசீர்வதிப்பர்.

 இந்நிலையில் சமீபத்தில் கேரள மாநிலத்தில் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. அப்பொழுது மணமேடையில் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரும் சூழ்ந்த நிலையில் இளம்ஜோடிக்கு மிகவும் கோலாகலமாக  திருமணம் நடைபெற்றுள்ளது.

 அப்போது முறைப்படி மருமகள் மாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்குவது வழக்கம். இந்நிலையில் திருமணத்தை நடத்தி வைத்த ஐயர் ஆசீர்வாதம் வாங்க கூறியபோது மாமியார் டென்ஷனில் என்ன செய்வது என தெரியாமல் மருமகளின் காலில் விழுந்து கும்பிட்டு உள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்து கிண்டல் செய்த நிலையில் இருவரும் சங்கடத்திற்கு உள்ளாகி விழுந்து விழுந்து சிரித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.