மாமியார் கர்ப்பம்.! மகன் திருமணத்தில் மருமகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

மாமியார் கர்ப்பம்.! மகன் திருமணத்தில் மருமகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!


mother-in-law-announces-shes-pregnant-at-sons-wedding

இளம்பெண் ஒருவர் அவருக்கு நடந்த திருமண நிகழ்வில் அரங்கேறிய கசப்பான அனுபவங்கள் குறித்து Reddit என்ற இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அந்த பெண் கூறுகையில், தன்னுடைய திருமண நிகழ்வில் கசப்பான நிகழ்வு தனக்கு நடந்ததாக தெரிவித்துள்ளார். 

தனக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்தனர். நானும் எனது திருமணம் மிகவும் ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் கொரோனா காரணமாக திருமணம் எளிமையான முறையில் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவானது. இதனையடுத்து நெருக்கமான உறவினர்களை மட்டும் அழைத்து திருமணம் நடைபெற்றது.

இதனையடுத்து உறவினர்கள் முன்பு அவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண நிகழ்ச்சியில், பெண்ணின் தந்தையும், மணமகனின் சகோதரரையும் உறவினர்கள் முன்பு பேச வைக்க நினைத்துள்ளனர்.

இதனையடுத்து மணமகளின் தந்தை, மணமகனின் தம்பி ஆகியோர் பேசியுள்ளனர். இதனையடுத்து, மணமகன் பேச இருந்த நேரத்தில் மணமகனின் தாயும், ஒரு சில நல்ல விஷயங்களை பேச விரும்புவதாக கூறியுள்ளார். இதனையடுத்து பேசிய மணமகனின் தாய், தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

மகனின் திருமணத்தில் அவர்களை வாழ்த்தாமல், தன்னுடைய கர்ப்ப செய்தியை அவர் கூறியது அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மணப்பெண் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள அந்த கட்டுரையில், " திருமண நாள் என்பது எங்களுக்கான நாள். மகனுடைய திருமணம் நடந்திருக்கும் அந்த நாளில் தாயாக இருக்கும் மாமியார், எங்களை வாழ்த்தாமல், அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கூறியது எனக்கு தாங்க முடியாத கோபத்தை வரவழைத்தது" என குறிப்பிட்டிருந்தார்.