ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மகன்... அதுனால புள்ள தப்புச்சான்! ஆனால் 6 வயது மகளை இடுப்பில் கட்டிக்கொண்டு தாய் செய்த கொடூரம்! பகீர் சம்பவம்...!!!



mother-daughter-drown-farm-well-telangana

தெலுங்கானா மாநிலம் மஞ்செரியல் மாவட்டத்தில் உள்ள லிங்காபூர் கிராமத்தில் தாய், மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான ரஜிதா, தனது 6 வயது மகள் அக்‌ஷிதாவை இடுப்பில் கயிற்றால் கட்டிக்கொண்டு விவசாயக் கிணற்றில் குதித்ததாக கூறப்படுகிறது. இதில் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கணவருடன் கருத்து வேறுபாடு;

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், ரஜிதாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே சில காலமாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து கணவரைப் பிரிந்த ரஜிதா, கடந்த சில மாதங்களாக தனது இரு குழந்தைகளுடன் லிங்காபூரில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: எங்ககிட்டையே உங்க வேலையை காட்டுறீங்களா? தவெகவை மிரட்டிய காங்கிரஸுக்கு முதல்வர் விஜய் வைத்த செக்..!!!

பெற்றோர் விவசாய வேலைக்கு சென்ற நேரத்தில் சோகம்

சம்பவத்தன்று ரஜிதாவின் பெற்றோர் வழக்கம்போல் விவசாய வேலைக்காக வெளியே சென்றுள்ளனர். அந்த நேரத்தில் வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தனது இளைய மகனை படுக்கையிலேயே விட்டுவிட்டு, மகள் அக்‌ஷிதாவை மட்டும் அழைத்துக்கொண்டு ரஜிதா வெளியே சென்றதாக கூறப்படுகிறது.

கிணற்றில் மிதந்த உடல்கள்; 

சிறிது நேரம் கழித்து அந்த வழியாகச் சென்ற உள்ளூர் மக்கள், விவசாயக் கிணற்றில் தாய் மற்றும் மகளின் உடல்கள் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக குடும்பத்தினருக்கும் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று இருவரின் உடல்களையும் மீட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் மகள் உயிரிழப்பு தொடர்பாக குடும்பத்தினரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு! 14 முக்கிய துறைகளின் லிஸ்ட் ரெடி... முதல்வர் விஜய் காட்டும் அதிரடி ஆக்க்ஷன்....!!!