கோழிப்பண்ணை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட தாய் மற்றும் குழந்தைகள்... கொலையா.? தற்கொலையா.? காவல்துறை தீவிர விசாரணை.!mother-and-children-found-dead-from-poultry-farm-well-m

மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கி வரும் கோழிப்பண்ணையில் இருந்த கிணற்றில்  ஒரு பெண் மற்றும் அவரது மூன்று குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் அவரிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகரில் உள்ள பாபுல் கான் என்ற இடத்தில் தீபக் கோலக் மாலி  என்பவர் கோழி பண்ணை நடத்தி வருகிறார். இந்தக் கோழி பண்ணையில் ஐந்து குடும்பங்கள் தங்கி இருந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களில் சாங்கடே குடும்பமும் ஒன்று. சாங்கடே  தனது மனைவி காஞ்சன் மற்றும் மூன்று குழந்தைகளுடன் பண்ணையில் வசித்து  வந்தார்.

maharastra

இந்நிலையில் இன்று காலை கோழி பண்ணை ஊழியர் ஒருவர்  மோட்டார் போடுவதற்காக கிணற்றுக்கு சென்று இருக்கிறார். அப்போது கிணற்றில் சாங்கடேவின் மகள்  பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை வந்த போது தான்  காஞ்சன் தனது குழந்தைகளுடன் காணாமல் போனது தெரிய வந்தது. இதில் ஒரு குழந்தை கிணற்றில் மிதந்ததால் சாங்கடேவை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். இப்போது அவர் தனது மனைவியுடன் சண்டையிட்டதை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை காவல்துறை கைது செய்தது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்பி ராகேஷ் கோழி பண்ணைக்கு வந்து  சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து தண்ணீர் கிணற்றில் இருந்து வெளியேற்றப்பட்ட போது காஞ்சன் மற்றும் அவரது மற்ற இரண்டு குழந்தைகளும் கிணத்தில் மூழ்கி இருந்திருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  சாங்கடே தனது மூன்று குழந்தைகளையும் கொன்று விட்டு மனைவியையும் கொலை செய்தாரா அல்லது அவரது மனைவி காஞ்சன் மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா என்று காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.