இந்தியா

பாவம் அந்த குரங்கு..! குரங்கை குச்சிகளால் குத்தி அதன் மீது கருப்பு சாயம் பூசிய கயவர்கள்..!

Summary:

Monkey Pinned Down With Stick, Smeared With Black Paint

குரங்கு ஒன்றை  கொடுமை படுத்தி அதற்கு கருப்பு சாயம் பூசியவர்களை கைது செய்த போலீசார் அவர்களுக்கு 60 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் அம்மா பாளையம் கிராமத்தில் தண்ணீர் குடிக்கவந்த குரங்கு ஒன்று தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து தத்தளித்தநிலையில் அதனை பிடித்து தூக்குபோட்டு துடிக்க துடிக்க மூன்று பேர் கொலை செய்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலானது.

இந்நிலையியல் உத்தரபிரதேச மாநிலத்தில் இளைஞர்கள் சிலர் குரங்கை குச்சிகளால் குத்தி அதன் மீது கருப்பு சாயம் ஊற்றி கொடுமைப்படுத்தியுள்ளனர். 2 நிமிடம் அடங்கிய அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. வீடியோவை பார்த்த பலரும்  அவர்களை கைதுசெய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.


Advertisement