மகனின் துணியை துவைத்த அம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.! இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது.!

மகனின் துணியை துவைத்த அம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.! இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது.!


mom-shocked-for-son-wallet

தற்போதைய வாழ்க்கை முறையில் மது மற்றும் புகை பழக்கத்தால் பல இளைஞர்கள் வாழ்கையை சீரழித்துக்கொண்டு வருகின்றனர். பலர் வீட்டிற்கு நல்ல பிள்ளையாகவும் வெளியில் பல தவறுகளையும் செய்து வருகின்றனர். அவர்கள் மது அருந்துவதோ, புகைபிடிப்பதோ எதோ ஒரு நாள் வீட்டிற்கு தெரியவரும். அன்று பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிக்கும் விதம் தான் பலரையும் நல்ல பாதைக்கு கொண்டு செல்கிறது.

இந்தநிலையில் ஹர்ஷ் மிட்டல் என்ற இளைஞர் அவரது பர்ஸில் ஆணுறைகளை வைத்திருந்துள்ளார். அவரது பர்ஸை அவரது ஆடையின் பாக்கெட்டிலே வைத்திருந்துள்ளார். அதனை அவரது பெற்றோர் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். இதுகுறித்து அந்த இளைஞர் அவருக்கு நிகழ்ந்த அந்த சம்பவத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அவரது ட்விட்டர் பதிவில், எனது அழுக்கு துணிகளை எனது அம்மா துவைத்துள்ளார். அப்போது எனது பேன்ட்டில் இருந்த பர்ஸை எடுத்து பார்த்த போது, அதில் இருந்த ஆணுறைகளை பார்த்து அதிர்ச்சியடைந்து தந்தையிடமும் கூறிவிட்டார். இதற்காக எனது அப்பா கடுமையாக திட்டினார். இது போன்ற ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது. இந்த நிகழ்வால் நான் மனம் நொந்து போனேன் என பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்வை அந்த இளைஞர் பதிவு செய்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் தற்போதுவரை இந்த ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.