1400 கிலோமீட்டர் ஸ்கூட்டியில் பயணம் செய்து மகனை மீட்டு வந்த தாய்..! ஊரடங்குக்கு நடுவே நெகிழவைத்த தாய் பாசம்.!

1400 கிலோமீட்டர் ஸ்கூட்டியில் பயணம் செய்து மகனை மீட்டு வந்த தாய்..! ஊரடங்குக்கு நடுவே நெகிழவைத்த தாய் பாசம்.!



mom-1400km-travel-for-her-son

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ரசியாபேகம் என்பவர் அரசு பள்ளி ஆசிரியையாக இருந்துள்ளார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவரது கணவர் இறந்த நிலையில் ரசியாபேகம் மட்டும் அவரது பிள்ளைகளை வளர்த்து வந்துள்ளார். இவரது 2வது மகன் நிஜாமுதீன் ஐதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவ அகாடமியில் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். 

 இந்தநிலையில் நிஜாமுதீன் அவரது நண்பரின் தந்தை உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால், நண்பரின் தந்தையை பார்க்க கடந்த மாதம் 12ஆம் தேதி நெல்லூருக்கு சென்றார். அந்த சமயத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதால் முகமது நிஜாமுதீன் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் இருந்துள்ளார். 

mom

 இதுகுறித்து தகவல் அறிந்த ரசியாபேகம் தன் மகனை அழைத்து வருவதற்கு பரிந்துரைக் கடிதத்தை வாங்கிக்கொண்டு, கடந்த திங்கட்கிழமை காலை 700 கி.மீ தூரத்தில் உள்ள நெல்லூருக்கு தனது ஸ்கூட்டியில் புறப்பட்டார். பின்னர், அவர் தனது மகன் முகமது நிஜாமுதீனை அழைத்துக்கொண்டு மீண்டும் ஊருக்கு இருவரும் திரும்பினர். தன் மகனை மீட்பதற்காக 1400 கிலோ மீட்டர் தூரம் ஸ்கூட்டியில் பயணம் செய்த தாயின் செயல் பெரும் நெகிழ்ச்கியை ஏற்படுத்தியுள்ளது.