இந்தியா

உற்சாகமாக கொண்டாடப்படும் பக்ரீத் திருநாள்! இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Summary:

modi wishes to muslims


இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய திருநாள் தான் பக்ரீத் திருநாள். ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12-வது மாதமான ’துல் ஹஜ்’ஜின் 10-வது நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், இந்த ஆண்டிற்கான பக்ரீத் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

பக்ரீத் திருநாளையொட்டி தமிழகத்தில் மசூதிகள் மற்றும் மைதானங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சிறப்பு தொழுகைகளில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பக்ரீத் திருநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில்,  ”பக்ரீத் பண்டிகை அமைதி மகிழ்ச்சியை  சமூகத்தில் மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.  


Advertisement