படிக்கட்டில் ஏறும்போது திடீரென கால் தடுக்கி கீழே விழுந்தார் பிரதமர் மோடி!! வைரல் வீடியோ!!!

கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலின் முதல் கூட்டம் இன்று உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் சந்திரசேகர் ஆசாத் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் நடந்தது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். மேலும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங், உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், பீகார் துணை முதலமைச்சர் சுஷில் மோடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் கங்கை நதியில் படகில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டனர் பிரதமர் மோடி. ஆய்வு முடிந்து படகுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பி வரும் போது, படியில் பிரதமர் மோடி ஏறும் போது கால் தடுக்கி கீழே விழ முயன்றார். உடனே அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமரை தாங்கி பிடித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
உ.பியில் இன்று படியேறும் போது தடுக்கி விழுந்த பிரதமர் மோடி pic.twitter.com/zIupnk8kP4
— Lingam S Arunachalam (@as_lingam) December 14, 2019