கண்ணீர் விட்டழுத இஸ்ரோ தலைவர்! கட்டியணைத்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி! நெகிழ்ச்சி வீடியோ!



modi-comfort-to-isro-leader

சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் என்ற லேண்டர், சனிக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் நிலவின் தரைப்பகுதியில் தரை இறங்குவதாக இருந்தது. நிலவின் அருகே 2.1 கிலோமீட்டர் தொலைவுக்கு அது அருகே சென்றபோது திடீரென விஞ்ஞானிகளுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இஸ்ரோவின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று பெங்களூரில் உள்ள அதன் தலைமையகம் சென்று, விஞ்ஞானிகளுடன் அமர்ந்து சந்திரயான் லேண்டர், நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரடியாக பார்த்துக்கொண்டிருந்தார்.

 
அப்போது இஸ்ரோ மையத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, விஞ்ஞானிகளிடையே உரையாற்றினார். நண்பர்களே சில மணிநேரங்களுக்கு முன்பு என்ன நடக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது, உங்கள் கண்கள் நிறைய தெரிவிக்கின்றன. இந்தியாவை பெருமை படுத்துவதற்காக நீங்கள் வாழ்கிறீர்கள், நான் உங்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்.

 நமது விண்வெளித் திட்டத்தால் நாம் பெருமைப்படுகிறோம். சந்திரனைத் தொடுவதற்கான நமது தீர்மானம் இன்னும் வலுவடைந்துள்ளது. நாம் வெற்றியின் புதிய உயரங்களை எட்டுவோம். இந்தியா உங்களுடன் உள்ளது என நான் விஞ்ஞானிகளுக்கு வலியுறுத்த விரும்புகிறேன். 

நாம் தோல்வியடையவில்லை. அடுத்த ஆராய்ச்சிக்கான் முன்னெடுப்பை விஞ்ஞானிகள் எடுத்துச்செல்ல வேண்டும் என தெரிவித்தார். பெங்களுரு இஸ்ரோ மையத்தில் உரையாற்றிவிட்டு செல்லும் போது கண்ணீர் விட்டழுத இஸ்ரோ தலைவர் சிவனை, இந்திய பிரதமர் கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.