அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
தனக்கு குழந்தை இல்லை என்று சாமியாரிடம் சென்ற இளம்பெண்.! மயக்க மருந்து கலந்த நீரை கொடுத்து சாமியார் செய்த கொடூரம்.!
மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் கடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக யாகம் நடத்தியும் தோல்வி அடைந்ததும், சமதி அடைய போவதாகவும் கூறி புகழ் பெற்றவர் மிர்ச்சி பாபா. இவர் மீது பெண் பக்தை ஒருவர் காவல்துறையில் நேற்று முன்தினம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
அப்பெண் மிர்ச்சி பாபாவிடம் தனக்கு குழந்தை இல்லை என்று கூறி வழிபட சென்றுள்ளார். ஆனால் அவர் மயக்க மருந்து கலந்த நீரைத் தீர்த்தமாக கொடுத்தது அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொன்று விடுவதாகவும் சாமியார் மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் துணிந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மிர்ச்சி பாபாவை பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.