கள்ளக்காதலனுடன் வாழ ஆசை; 2 குழந்தைகளை பலிகொடுத்த கொடூர தாய்..!MH Raigad Mother Killed 2 Children While She Went to Live With Affair Man 

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி ஷீத்தல் பால் (வயது 25). இவர் தனது கணவர் மற்றும் 5 வயது மகள், 3 வயது மகனுடன் வாழ்ந்து வருகிறார். 

இந்நிலையில், ஷீத்தலுக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இவர்களுக்கு இடையே கள்ளக்காதலாக மாற, இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

ஒருகட்டத்தில் தனது கள்ளகாதலருடன் புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள திட்டமிட்ட பெண்மணி, வீட்டை விட்டு வெளியே முடிவு செய்துள்ளார். கைக்குழந்தைகள் இருப்பதால், அவர்கள் தனக்கு இடையூறாக இருக்கலாம் என அவர் எண்ணியுள்ளார். 

இதனையடுத்து, குழந்தைகள் இருவரையும் கொலை செய்த பெண்மணி, வெளியில் கபட நாடகம் ஆடி இருக்கிறார். பின் காவல் துறையினர் சந்தேகித்து மேற்கொண்ட விசாரணையில் உண்மை அம்பலமாகி இருக்கிறது. 

தற்போது காவல் துறையினர் ஷீத்தல் மற்றும் அவரின் காதலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.