12 அடி ஆழ தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய அடுத்தடுத்த இறங்கிய மாணவர்கள்! தேங்கிருந்த விஷவாயுவை சுவாசித்ததால் நேர்ந்த விபரீதம்! 4 பேர் உயிரிழப்பு.. உயிருக்கு போராடும் 1 மாணவன்... பகீர் காட்சி!!!



mathura-gurukulam-toxic-gas-student-deaths

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் பிருந்தாவனில் உள்ள சமஸ்கிருத குருகுலத்தில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 4 மாணவர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். சைதன்ய விஹார் பகுதியில் உள்ள மகரிஷி பாணினி சமஸ்கிருத குருகுலத்தில் நேற்று முன்தினம் இரவு இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. மேலும் ஒரு மாணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

12 அடி ஆழ தொட்டிக்குள் அடுத்தடுத்து இறங்கிய மாணவர்கள்

குருகுல வளாகத்தில் உள்ள சுமார் 12 அடி ஆழமுள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, தொட்டியை ஆய்வு செய்வதற்காக முதலில் ஒரு மாணவர் உள்ளே இறங்கியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால், அவரை மீட்க மற்ற மாணவர்கள் அடுத்தடுத்து தொட்டிக்குள் சென்றதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நெஞ்சே பதறுது...! அதிவேகமாக வந்த கார்... சாலையை கடக்க வளைந்த பைக் நொடிப்பொழுத்தில் காற்றில் தூக்கி வீசப்பட்ட 2 பேர்! நடுரோட்டில் நடந்த பயங்கர விபத்து...! ஷாக் வீடியோ...!!!

ஆனால் தொட்டிக்குள் தேங்கியிருந்த விஷவாயுவை சுவாசித்ததால் மாணவர்கள் ஒருவரன்பின் ஒருவராக மயங்கி விழுந்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. மொத்தம் 5 மாணவர்கள் தொட்டிக்குள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீட்புப் பணியில் 5 மாணவர்கள்; 4 பேர் உயிரிழப்பு

தகவல் கிடைத்ததும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் காவல் துறையினரும் உடனடியாக அங்கு விரைந்தனர். மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டு தொட்டிக்குள் சிக்கியிருந்த 5 மாணவர்களையும் வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் 4 மாணவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்றொரு மாணவர் ஆபத்தான நிலையில் இருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் யோகி

குருகுலத்தில் நடந்த இந்த விஷவாயு தாக்குதல் குறித்து போலீஸார் மற்றும் மாவட்ட நிர்வாகம் விசாரணையை தொடங்கியுள்ளது. தொட்டிக்குள் எந்த வகையான விஷவாயு தேங்கியது, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா என்பது உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

மாணவர்கள் உயிரிழந்த தகவல் அறிந்த உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

இதையும் படிங்க: கணித பாடத்தில் நல்ல மார்க் போடுறேன்..! 14 வயது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி வகுப்பறையிலேயே அத்துமீறிய ஆசிரியர்! அடுத்து வீட்டில்... 8 மாதம் கழித்து வெளிவந்த பகீர் உண்மை..!!!