+2 மாணவியை கர்ப்பமாக்கிய கணித ஆசிரியர்... போக்சோ சட்டத்தில் சிறையிலடைத்த காவல்துறை.!!



math-teacher-who-impregnated-plus-two-student-arrested

தூத்துக்குடி மாவட்டம், கொங்கராயகுறிச்சி பகுதியில் அமைந்துள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் மணிகண்டன்(35). இவர் +2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக கடந்த ஏப்ரல் மாதம் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதற்கடுத்து பிளஸ் 2 படிக்கும் அந்த மாணவி உடல்நல குறைவால் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது அவர் கர்ப்பமாக இருப்பதை  மருத்துவர்கள் உறுதி செய்தனர். மேலும் சுமார் 6 மாதங்களாக இந்த கர்ப்பம் இருப்பதையும் கண்டறிந்தனர். மாணவியிடம் விசாரித்த போது தனக்கு நடந்த இந்த கொடுமைக்கு கணித ஆசிரியர் மணிகண்டன் தான் காரணமென கூறியுள்ளார்.

Tamilnadsu

இதனைடுத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினர். மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் அக்டோபர் 4ஆம் தேதி மணிகண்டனை கைது செய்து மத்திய சிறையிலடைத்தனர். மாணவியை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்து அவருக்குரிய சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது‌.

இதையும் படிங்க: "வாத்தியார் செய்யுற வேலையா இது..." +1 மாணவிக்கு பாலியல் சீண்டல்.!! கணித ஆசிரியர் கைது.!!

இந்த சம்பவம் குறித்து மறைத்த பள்ளி நிர்வாகம் மீது கடும் கோபத்தில் இருந்த உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் 200-க்கும்  மேற்பட்டோர் பள்ளி முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை பள்ளி நிர்வாகத்தின் மீது எடுக்கப்படுமென  வாக்குறுதி அளித்தனர். இதைக் கேட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அட கொடுமையே... +2 மாணவிக்கு பாலியல் டார்ச்சர்.!! கணக்கு டீச்சர் கைது.!!